Sunday, January 30, 2011

என் தமிழே...

வெகு நாட்களாய் என்னுள் இருந்த ஒரு தாகம் எப்படியாவது ஒரு "blog" எழுதணும்நான் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் என்முதல் பக்கம் தமிழிலே தான் இருக்கனும் ஒரு சின்ன விருப்பம் (விபரீதம்!!)... என் தாய் மொழிக்கு நான் கொடுக்கும்  ஒருமரியாதையாய் இதை நினைக்கிறேன்செம்மொழி  அளவிற்கு வளர்ந்த பிறகும்தன் பிள்ளைகளிடம் சிக்கி  தவிக்கும் ஒருதாய்க்குஅதை துன்பப்படுத்தி  கொண்டிருக்கும் ஒரு மகனின் பிதற்றலாக இதை   கொள்ளலாம்தவறிருந்தால் மன்னிக்கவும்நான்சுயமாக  எழுதும் முதல் பக்கம் என்பதால் என்;பெற்றோர்களுக்கும் என் உடன் பிறப்புகளுக்கும்என் ஆசிரிய பெருமக்களுக்கும்,என் இனிய நண்பர்களுக்கும்  இதை சமர்பிக்கிறேன்.

12/02/2008 என் blog-  தொடங்கினேன்முதல் பதிவை செய்ய  கிட்ட தட்ட மூன்று வருஷம்... இதற்கு முழு முதற் காரணம் மேற்கூறிய ஒரு சின்ன விருப்பம்.. தமிழில் எழுதணும்...  நமக்கு அவ்வளவு வராதே... நிறைய யோசிக்கணுமே...  இப்படி பலமுட்டுக்கட்டைகள் இந்த முத்துவிற்கு... சின்ன  வயதிலிருந்து பேசிக்கிட்டு இருக்கிற ஒரு மொழியில் ஒரு  பக்கம் எழுத இவ்வளவுதயக்கம்... என்ன கொடுமை சார் இது என்பதை போல இருந்தது... எப்படியாவது இன்று எழுதணும் என்ற முடிவிற்குவந்துவிட்டேன்... முடிவிற்கு வந்த பிறகும் எங்கு தொடங்குவது என்று ஒரு தடுமாற்றம்... யாமறிந்த  மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிமையான மொழி  இல்லை என பாரதி கூறியதை படித்திருக்கிறேன்.. என் தமிழ் என் தமிழ் என்று மார் தட்டி கொள்ளும் பல  அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறேன்... ஆ!! இவ்வளவு  சிறப்புகள் இருந்தும் ஏன் தமிழில் பேசவே நிறைய பேர் தயங்குகிறார்கள் என நெடு நாட்களாய் எனக்கு சந்தேகம்  இருந்து கொண்டே இருந்தது... கொஞ்சம் யோசனை  பண்ணியபோது ,என் புத்திக்கு எட்டிய சில விஷயங்கள்....  நான் படித்ததோ ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில்... பத்து  பாடத்தில் தமிழுக்கென்றுஒதுக்கப்பட்ட பாடங்கள் இரண்டு...  சிறு வயதிலிருந்தே தமிழுக்கும் எனக்கும் தகராறுனகரங்கள்கரங்கள் , கரங்கள் எப்படி எங்கே பயன் படுத்த வேண்டும் என்பது இன்று வரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது...  எளிய முறையில் இதை சிறு வயதில்கற்றுகொடுக்கும்  ஆசிரியர்கள் தமிழ் நாட்டில் மிக குறைவு... அத்துடன் தமிழ்  மக்களுக்கென்றே உண்டான ஒரு சிறப்பு " வந்தாரை வாழ வைப்பது"... மற்ற மொழிமக்கள் மேல நாம் காட்டுகிற மரியாதையை நம்ம மொழி மீதும்மக்கள் மீதும் காட்டுவதுஇல்லை... நாம் செய்யற தப்பையும் நாம  பாக்கவே மாட்டோம்... நான் பத்தாவது படிக்கற பொழுது  தமிழில் ஒரு பரீட்சைவைத்தார்கள்.... அறிஞர் அண்ணா  எழுதிய "பூபதியின் ஒரு நாள் அலுவல்என்ற சிறுகதையில் இருந்து ஒரு கேள்வி... நானும் என்நண்பனும் அடுத்து  அடுத்து அமர்ந்திருந்தோம்.... அவன் எழுதுவது எனக்கு  நன்றாக தெரிந்தது... என்னை போலவே அவன்தமிழும்  மட்டம்...பூபதி என்று எழுதுவதற்கு பதில் பூபாதி என்று  எழுதியிருந்தான்.... அவன் தவறில் ஒரு மகிழ்ச்சி.... அவன்  என்னை விட மதிப்பெண் குறைவாக வாங்குவான் என்ற  நிம்மதி.... அவன் தவறை பார்த்து மகிழ்ந்த நான் பூபதியை; புபதி என்றுஎழுதியதை கண்டிருக்கவில்லை.... இருவரும் ஒரே மதிப்பெண்கள்... ஒரே மாதிரியான அர்ச்சனைகள் தமிழ்  ஆசிரியையிடம்....அடுத்தவர் தவறை பார்ப்பவர் தம் தவறை பார்ப்பதில்லை என்பதற்கு ஒரு சான்று ... அம்மா அப்பா  என்றால் அடி டாடி மம்மி என்றால் பாராட்டு.... இப்படி  இருந்தால் தமிழ் காணாமல் தான் போகும்.... தமிழ் கஷ்டமாக இருப்பதற்கு இன்னொரு காரணம்அதன் மொத்த எழுத்துக்கள் 247... ஆங்கிலத்திலோ வெறும் 26.... இதை எப்படி குறைப்பது என்று சத்தியமாக எனக்குதெரியவில்லை....ஆனா குறைத்தால் என்ன மாதிரி பசங்க நல்ல தமிழ்ல எழுதுவோம்.... பிள்ளைங்க கிட்ட தமிழ்ல பேசறது சகதமிழர்களிடம் தமிழில் பேசுவதுபிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதுபாட திட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்மையானதமிழ் உணர்வு உள்ள ஆசிரியர்கள்...   இதெல்லாம் நடந்தால் தமிழ் தலை நிமிர்ந்து வாழும் என்பது என் கருத்து ....